TG Telegram Group & Channel
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil | United States America (US)
Create: Update:

'அவர்கள்' என்றால், மொத்தம் ஐந்து பேர் : சார்லி சாப்ளின், டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் (Douglas Fairbanks), மேரி பிக்ஃபோர்ட் (Mary Pickford), கிரிஃபித் (G. W. Griffith) & வில்லியம் ஹார்ட் (William. S. Hart) ரொம்ப எளிமையான, நேரடியான திட்டம் அவர்களுடையது.

பெருமுதலாளிகளே, நீங்கள் மட்டும் தான் ஒன்றாகச் சேரமுடியுமா ? நாங்களும் ஒன்றாகச் சேர்வோம். எங்களுக்கென்று ஒரு பட நிறுவனத்தைத் தொடங்குவோம். எங்கள் படங்களை நாங்களே தயாரித்துக் கொள்வோம். உங்கள் தயவு எங்களுக்குத் தேவையில்லை ! உண்மையில், அப்படியொரு 'புதிய' பட நிறுவனத்தைத் தொடங்குகிற யோசனை எதுவும் அவர்களிடம் இல்லை. சும்மா, எதிர் தரப்பினரைக் குழப்புவதற்காக, அவர்களின் திட்டங்களை முறியடிப்பதற்காக, பத்திரிகையாளர்களை அழைத்து, இப்படி ஒரு அதிரடி அறிக்கை விட்டுப் பார்க்கலாம் என்று தான் ஆரம்பித்தார்கள். ஆனால், இது பற்றி மேலே பேசப்பேச, அவர்களுக்கு அந்தத் திட்டத்தின் வெற்றி சாத்தியங்கள் தெரிந்தன. தைரியமாய் இறங்கி, ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்து விடலாம் என்று முடிவு செய்தார்கள்.

ஆகவே, 1919ம் ஆண்டு, 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (United Artists) என்ற பெயரில், சாப்ளின் மற்றும் நண்பர்களின் புதிய பட நிறுவனம் தொடங்கப்பட்டது. 'UA' என்று செல்லமாய் அழைக்கப்பட்ட 'யுனைடட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' நிறுவனம், அது வரை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த முறையையே தலைகீழாய் மாற்றி அமைத்தது. பணக்கார முதலாளிகள் படம் எடுப்பது, மற்ற நடிகர்களும், கலைஞர்களும் அவர்களிடம் தொழிலாளிகளாக வேலை செய்து, சம்பளம் வாங்குவது என்பதை மாற்றி, இயக்குனர்கள் தங்களின் படங்களைத் தாங்களே தயாரித்துக் கொண்டு, பின்னர் அந்தப் படங்கள் வெளியான பிறகு, லாபத்தில் பங்கு பெறுவது என்று 'யுஏ'வின் திட்டம். (சுருக்கமாய்ச் சொல்வதானால், சாப்ளின் எதிர்பார்த்த 'முழு சுதந்திர'த்தின் அடுத்த நிலை !) ஆனால், 'யுஏ'வின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த சார்லி சாப்ளின், உடனடியாக அதில் முழு முனைப்புடன் இறங்க முடியவில்லை. ஏனெனில், ஏற்கெனவே 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துக்காக எட்டு படங்களைத் தயாரித்துத் தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அதில் ஒரு சில படங்கள் தான் தயாராகியிருந்தன. ஆகவே, மீதமுள்ள படங்கள் அனைத்தையும் எடுத்து முடிக்கும் வரை, அவர் 'யுஏ'வுக்காகப் படங்களைத் தயாரிக்க முடியாத நிலைமை. இதனால், ஒரு பக்கம் தனது சொந்தக் கம்பெனியை வைத்துக் கொண்டு, மறுபக்கம் 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துக்காகத் தன்னுடைய படங்களை எடுத்துக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின்.

1923ம் ஆண்டில் தான், அவரால் 'யுஏ'க்காகத் தனது முதல் படத்தைத் தயாரிக்க முடிந்தது. 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்துக்காக சாப்ளின் இயக்கி, நடித்து, தயாரித்த படங்களில் முக்கியமானது, 'The Kid'. சாப்ளினின் மற்ற படங்களைப் போலின்றி, கிட்டத் தட்ட ஒரு மணி நேர அளவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தான், அவருடைய முதல் 'முழு நீளத் திரைப்படம்' ! 'ஆறு ரீல்முழுக்க சந்தோஷம்', என்று விளம்பரப் படுத்தப்பட்ட 'The Kid' திரைப்படம், கலகலப்பும், மனிதாபிமானமும், சோகமும் சரிவிகிதத்தில் கலந்த சாப்ளினின் அற்புதப் படைப்பாய் வெளி வந்தது. இந்தப் படம் தொடங்குவதற்குச் சில நாள்கள் முன்பு தான், சாப்ளினின் முதல் மகன் பிறந்து, மூன்றே நாள்களில் இறந்து போயிருந்தான். அந்த இழப்பின் சோகம் தான், 'The Kid' திரைப்படத்தின் மையக்கருவாய் அமைந்திருக்கிறது என்று விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.

தாயால் கைவிடப்பட்ட ஒரு குழந்தையை, நாடோடி சாப்ளின் கண்டெடுத்து, வளர்ப்பது தான் இந்தப் படத்தின் கதை. இதன் வழியே, இல்லாமையின் சோகத்தையும், அநாதைகளாக்கப் பட்டுவிடுகிற குழந்தைகளின் யதார்த்த நிலைமையையும் கலாப்பூர்வமாய் வெளிப்படுத்தியிருந்தார் சார்லி சாப்ளின். அவர் மனம் விரும்பிய தரத்தில் இந்தப் படத்தை உருவாக்குவதற்கு, சாப்ளினுக்குக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆனது. இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள், சார்லி சாப்ளினும், அந்தச் சிறுவனும் இணைந்து அடிக்கும் கூத்துகளும், கைவிடப்பட்ட அந்தச் சிறுவனின் பின்னணியில் மௌனமாய்த் தொடர்ந்து வரும் ஒரு சோக இழையும் தான்.

1921ம் ஆண்டு வெளி வந்த இந்தப் படம், சாப்ளினின் படங்களில் மிகவும் முக்கியமானதாய் மதிக்கப் படுகிறது. அது வரை சிறிய, மிகச்சிறிய குறும்படங்களின் நாயகராய், இயக்குனராய்ப் புகழ் பெற்றிருந்த சார்லி சாப்ளின், 'Feature Film' எனப்படும் முழு நீளத் திரைப்படங்களின் தளத்தில் ஒரு முக்கியமான சக்தியாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, 'The Kid' உதவியது.

ஆனால், 'The Kid' படம் வெளிவருவதற்கு முன், சார்லி சாப்ளின் அனுபவித்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அவருடைய இரண்டு ரீல் படங்களை வாங்குவதற்கே ஏகப்பட்ட சாக்குப் போக்குகள் சொல்லிக் கொண்டிருந்த 'ஃபர்ஸ்ட் நேஷனல்' நிறுவனத்தினர், இந்த ஆறு ரீல் படத்தை அடிமாட்டு விலைக்குத் தான் கேட்டார்கள். அவர்க

>>Click here to continue<<

Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil

Share with your best friend
VIEW MORE

United States America Popular Telegram Group (US)