TG Telegram Group & Channel
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil | United States America (US)
Create: Update:

பிக்கை இருந்தது. என்னுடைய வெற்றிகள், சாதனைகளையெல்லாம், அந்த ஒருத்திக்குத் தரப் போகும் காணிக்கையாகதான் எண்ணிச் சேர்த்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது, பணம், புகழ் எல்லாம் என்னிடம் இருக்கின்றன. ஆனால், அவற்றை யாருக்குச் சமர்ப்பணம் செய்து சந்தோஷப்படுவது என்று தான் தெரியவில்லை' ஹெட்டி கெல்லியைப் போலவே, சார்லி சாப்ளினை ரொம்பவும் பாதித்த இன்னொரு பெண், ஏட்னா பர்வியான்ஸ்.

இவரை நாம் ஏற்கெனவே சந்தித்திருக்கிறோம். தன்னோடு இணைந்து நடிப்பதற்குப் பொருத்தமான ஒரு கதாநாயகியைத் தேடி, பல பெண்களைப் பார்த்துச் சலித்து, கடைசியில் ஏட்னாவைக் கண்டு கொண்டார் சார்லி சாப்ளின். அதன் பின், பல ஆண்டுகளுக்கு சார்லி சாப்ளினும், ஏட்னா பர்வியான்ஸும் வெற்றிகரமான திரை ஜோடியாய் வலம் வந்தார்கள். சாப்ளின் வெவ்வேறு கம்பெனிகளுக்குத் தாவிய போதும், ஒவ்வொரு முறையும், ஏட்னாவை மட்டும் தவறாமல் தன்னோடு அழைத்துக் கொண்டுவிடுவார் - கிட்டத்தட்ட 34 படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். நடிப்பு அனுபவம் அவ்வளவாய் இல்லாத ஏட்னாவுக்கு, திரையுலகைப் பற்றி சொல்லித் தந்து, அவரை ஒரு நல்ல நடிகையாக மெருகேற்றியவர் சார்லி சாப்ளின் தான். அதே போல், சாப்ளினுக்கு ஒரு நல்ல தோழியாகவும், வழிகாட்டியாகவும் ஏட்னா இருந்தார். சாப்ளினும், ஏட்னாவும் ஒருவரையொருவர் காதலித்தார்களா, இல்லையா என்பது, ஹாலிவுட் சரித்திரத்தின் புரியாத புதிர்களில் ஒன்று. சார்லி சாப்ளினின் சுயசரிதையில் கூட, அவர் இதைப் பற்றித் தெளிவாக ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், வழக்கம் போல், இந்த ஜோடியைப் பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் ஏராளம். 'சாப்ளின் ஏட்னாவைக் காதலித்தார், ஆனால் ஏட்னா அவரைக் காதலிக்கவில்லை' என்று ஒரு கோஷ்டி சொல்கிறது. 'அப்படி இல்லை, ஏட்னாவுக்குத் தான் சாப்ளின்மீது ஒருதலைக் காதல்' என்று இன்னொரு கோஷ்டி சண்டைக்கு வருகிறது. 'இவர்கள் இருவருமே தப்பு, சாப்ளினும், ஏட்னாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே' என்றும் சிலர் சொல்கிறார்கள். மிச்சமிருக்கும் இன்னொரு கட்சியினர், 'அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தது நிஜம்', என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்கிறார்கள். (ஏட்னாவைச் சந்தித்த காலத்தில், சாப்ளின் நைல்ஸ் கிராமத்தில் தான் தங்கியிருந்தார். அப்போது, அவரோடு ஏட்னாவும் சேர்ந்து வாழ்ந்தார் என்று சில உள்ளூர் வதந்திகள் தெரிவிக்கின்றன !) இப்படி, அவர்கள் காதலித்தார்களா என்பதே குழப்படியாக இருக்கும் போது, அவர்கள் எப்படி, எதனால் பிரிந்தார்கள் என்றும் பல ஊகங்கள் உலவுகின்றன. சாப்ளின் ஏட்னாவை ஏமாற்றினாரா, அல்லது, ஏட்னா தான் சாப்ளினைக் கோபப் படுத்தினாரா என்று யாருக்கும் நிச்சயமாய்த் தெரியவில்லை. இதைப் பற்றி சார்லி சாப்ளின் குறிப்பிடுகையில், 'எனக்கு ஏட்னாமீது நம்பிக்கையில்லை, ஏட்னாவுக்கு என்மீது நம்பிக்கையில்லை. ஏன், எனக்கே என் மீது நம்பிக்கையில்லை', என்று பூடகமாய்ச் சொல்கிறார். ஒரு வேளை, ஏட்னா அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியிருக்கலாம். ஆனால், திருமணம், குடும்பம், குழந்தைகள் என்ற கட்டுப் பாடுகளில் அடைபட விரும்பாமல், சார்லி சாப்ளின் அதை மறுத்திருக்கலாம். எல்லாமே ஊகங்கள் தான். ஆனால், ஏட்னாவின் நட்பு, சார்லி சாப்ளினுக்கு வேறொரு விதத்தில் உதவியது. சிறுவயதிலிருந்தே, அதிக நண்பர்களோடு கலந்து பழகாமல், தனிமையிலே இனிமை கண்டு பழகி விட்ட சாப்ளின், ஏட்னாவுடன் பழகத் தொடங்கிய பிறகு தான், தனக்குள்ளிருந்த தயக்கத் திரையை விலக்கிக் கொண்டு, எல்லோருடனும் சகஜமாய் நட்பு பாராட்டலானார். அப்போது தான், மற்றவர்களின் மீது அன்பும், அக்கறையும் செலுத்துகிற மென்மையும், சக மனிதர்களின் கோணத்திலிருந்து சிந்திக்கும் கலையும் அவருக்குக் கை வந்தது. சாப்ளினின் இந்த மாற்றங்களையெல்லாம், அவருடைய அடுத்தடுத்த படங்களில் தெளிவாய்ப் பார்க்க முடிந்தது.

நகைச்சுவைப் படங்கள் என்றாலே, வெறும் கோமாளி மனிதர்களையும், அவர்களின் அதீத அசட்டுத்தனங்களையும் காண்பிப்பது தான் என்றிருந்த நிலையை மாற்றி, நம் எல்லோரையும் போல் சாதாரணமான, எல்லாவிதமான ஆசாபாசங்களுடன் கூடிய மனிதர்களை, அவர்களின் வாழ்வியல் அம்சங்களை, இயல்பான உணர்ச்சிகளை, யதார்த்தமான நிலையிலிருந்து படம்பிடித்துக் காட்டினார் சாப்ளின். அதுவரை சாப்ளினின் படங்களில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே, 'சும்மா' வந்து போகிறவர்களாகத் தான் இருப்பார்கள். அல்லது, கதாநாயகனோ, வில்லனோ கலாட்டா செய்து கலாய்ப்பதற்குப் பயன்படும் 'உப'பாத்திரங்கள் என்ற அளவில் தான் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்.

1915ம் ஆண்டு, ஏட்னாவுடன் நடிக்கத் தொடங்கியபிறகு, அவருடைய நடிப்புத்திறனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், தன்னுடைய படங்களில் கதாநாயகி பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கினார் சார்லி சாப்ளின். அவருடைய நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக, ஏட்னாவும் சிறப்பாக நடித்து, பெயர் பெற்றார். சார்லி சாப்ளினும், ஏட்னாவும் ஒருவரையொர

>>Click here to continue<<

Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil

Share with your best friend
VIEW MORE

United States America Popular Telegram Group (US)