TG Telegram Group & Channel
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil | United States America (US)
Create: Update:

*இப்படிக்கு 🏹 காலம்*

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

*இணையற்ற நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு!*

*9. The Gold Rush*

ஒரு காலத்தில், 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்துக்காக, ஏகப்பட்ட டுமீல் - டுமீல் படங்களில் நடித்தார் ஜெய்சங்கர். அவர் எந்தப் படத்தில் யாரைச் சுடுகிறார், எதற்காகச் சுடுகிறார், எந்தப் படத்தில் யாரோடு காதல் கொள்கிறார் என்றெல்லாம் சரியாய்ப் புரியாமல், ஒருவித மயக்கத்திலேயே அந்தப் படங்களைப் பார்த்து, வெற்றிப் படங்களாக்கினார்கள் ரசிகர்கள். அது போல, சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், ஏராளமான 'கௌபாய்' படங்களுக்காகப் புகழ்பெற்றது 'எஸ்னே' நிறுவனம். புழுதி பறக்க ஓடும் குதிரைகளும், ஓயாத துப்பாக்கிச் சத்தங்களும் தான், 'எஸ்னே' படங்களின் நிரந்தர அடையாளமாய் இருந்தது. இன்னும் குறிப்பாய்ச் சொல்வதானால், அந்த நிறுவனத்தின் சின்னமே, ஒரு செவ்விந்தியரின் தலை தான் ! 'எஸ்னே' நிறுவனத்தின் இந்த 'அடிதடி' பிம்பத்தோடு கொஞ்சமும் சம்பந்தமில்லாத சார்லி சாப்ளின், அங்கே வந்து மாட்டிக் கொண்டது காலத்தின் கட்டாயம் என்று தான் சொல்ல வேண்டும்.

என்றாலும், நாம் முன்பே பார்த்தது போல், 'எஸ்னே'வில் அவருக்கு நல்ல மரியாதை கிடைத்தது. தன்னுடைய ஆரம்பகால திரை வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க பல படங்களை 'எஸ்னே'வுக்காகத் தந்தார் சார்லி சாப்ளின்.

(சுருக்கமான ஒரு பட்டியல் : 'The Champion', 'In the Park', 'The Tramp' & 'A Night out in the show').

'கீஸ்டோன்' நிறுவனத்தோடு ஒப்பிடுகையில், 'எஸ்னே'வில் சாப்ளின் ரொம்பவே சந்தோஷமாய் இருந்தார். குறைவான படங்கள், நிறைவான இயக்கம் என்று தனது திரைப் பாதையை மெருகேற்றிக் கொண்டார். ஆனால், இந்தத் திருப்தியில் ஒரு லாரி மண்ணை அள்ளிக் கொட்டுவது போல், திடீரென்று 'எஸ்னே' நிறுவனத்தினர் சாப்ளினிடம் ரொம்ப முரட்டுத் தனமாய் நடந்து கொள்ளத் தொடங்கினார்கள். அவருடைய பழைய படங்களையும், 'அடாசு' என்று வீசியெறிந்த காட்சிகளையும் தூசு தட்டி எடுத்து, புதிய பெயர்களில் அரைவேக்காடுப் படங்களாய் வெளியிட்டுப் பணம் செய்தார்கள். பணப்பிரச்சனை எல்லாம் இரண்டாம் பட்சம். அவர்கள் தன்னுடைய படைப் புரிமையை காயப்படுத்தி விட்டார்களே என்பது தான் சாப்ளினுக்குத் தாங்க முடியாத வருத்தமாய் இருந்தது. (இந்தக் கெட்டதிலும் ஒரு நல்லது - பின்னாள்களில், தன்னுடைய படங்கள் எல்லாவற்றின் உரிமையும், தனக்கே சேரும்படி பார்த்துக் கொண்டார் சார்லி சாப்ளின்) இப்படியாக, பல காரணங்களை முன்னிட்டு, 'எஸ்னே'விலிருந்து சார்லி சாப்ளின் வெளியேற வேண்டிய கட்டாயம் உண்டாகி விட்டது. இதைத் தெரிந்து கொண்ட அவருடைய அண்ணன் சிட்னி சாப்ளின், உடனடியாக நியூயார்க் விரைந்தார். சாப்ளினின் பிரதிநிதியாக, அவரை வைத்துப் படமெடுக்க விரும்பிய வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்களை அழைத்துப் பேசினார். ஏற்கெனவே இரண்டு முறை சூடுபட்டுக் கொண்ட சார்லி சாப்ளின், இந்த முறை தனது நிபந்தனையைத் தெளிவாகச் சொல்லி விட்டார் . இப்படிப் படமெடுக்க வேண்டும், அப்படி எடுக்க வேண்டும் என்றெல்லாம் யாரும் எனக்கு அறிவுரை சொல்லக்கூடாது. கட்டளை இடக்கூடாது. நான் மெதுவாகத் தான் படம் எடுப்பேன். எனக்கு முழுத் திருப்தி உண்டாகும் வரை விட மாட்டேன். அதற்கு மூன்று மாதமானாலும் சரி, மூன்று வருடமானாலும் சரி ! நீங்கள் படத்தின் தரத்தைத் தான் பார்க்க வேண்டும். சீக்கிரமாய்ப் பணம் பண்ணலாம் என்ற பேராசை எண்ணத்தோடு என்னிடம் வராதீர்கள் ! அப்போது அவரை அணுகிய நிறுவனங்களிடையே, 'ம்யூச்சுவல்' (Mutual) என்ற படக் கம்பெனியை சார்லி சாப்ளினுக்குப் பிடித்திருந்தது. தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின், சாப்ளினுக்கு, வாரம் பத்தாயிரம் டாலர் சம்பளமும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் போனஸ் தொகையும் தருவதாக அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டது. இங்கே ஒரு சிறிய மனக்கணக்கு - 1914ல் சாப்ளினின் சம்பளம், வாரத்துக்கு நூற்றைம்பது டாலர், அதன் பிறகு, வாரத்துக்கு நூற்றி எழுபத்தைந்து டாலர். அடுத்த வருடம், 'எஸ்னே'வில் சேர்ந்த போது, வாரத்துக்கு 1250 டாலர், இப்போது, 'ம்யூச்சுவல்' நிறுவனத்தோடு இணையும் போது, அதைப் போல் பல மடங்கு - வாரத்துக்குப் பத்தாயிரம் டாலர் சம்பளம் ! அது தான் சார்லி சாப்ளின்.

அவருடைய படங்கள் ஒவ்வொன்றும், அவருக்காகத் தான் ஓடுகின்றன என்று நிச்சயமாய்த் தெரிந்து கொண்டிருந்த பட அதிபர்கள், அவர் எத்தனை டாலர் சம்பளம் கேட்டாலும் தருவதற்குத் தயாராய் இருந்தார்கள். எப்படியாவது, தங்கள் பட நிறுவனத்தில் சாப்ளின் நடித்தால் போதும், தங்கள் வீட்டில் பண மழை கொட்டுவது நிச்சயம் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், சார்லி சாப்ளினின் அண்ணன் சிட்னி சாப்ளினைப் பற்றியும் சில வரிகள் சொல்ல வேண்டும். சிறுவயதில், சார்லி அனுபவித்த அத்தனை துயரங்களையும், அவரோடு பகிர்ந்து கொண்ட ஆத்மார்த்தமான தோழர் சிட்னி. மனநலக் குறைவால் அம்மாவைப் பிரிந்தே வாழ்ந்த இந்தச் சகோதரர்கள், ஒரு

>>Click here to continue<<

Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil

Share with your best friend
VIEW MORE

United States America Popular Telegram Group (US)