TG Telegram Group & Channel
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil | United States America (US)
Create: Update:

வருக்கொருவர் ஆறுதலாகவும், நல்ல துணையாகவும் பழகியவர்கள், ஒருவர் மீது மற்றவர் மிகுந்த பாசம் கொண்டவர்கள். சார்லி சாப்ளின், மேடை நாடகங்களிலும், பிற கலை நிகழ்ச்சிகளிலும் தனக்கான எதிர்காலத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, அதே துறையில் அவரோடு பயணம் செய்து கொண்டிருந்த சிட்னி, அவருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தார். குறிப்பாக, சார்லி சாப்ளினின் பண விவகாரங்களையெல்லாம் சிறப்பாகப் பார்த்துக் கொண்டவர் சிட்னி தான் ! நாடகக் கம்பெனிகளிலும், திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகும் கூட, யாரிடம் எப்படிப் பேச வேண்டும், தன்னுடைய நடிப்புக்கு எவ்வளவு சம்பளம் கேட்பது, அவர்கள் அதைக் கொடுக்க மறுத்தால் என்ன செய்யலாம், இந்தச் சம்பளத்தைப் பெறுவதற்குத் தனக்குத் தகுதி உண்டு என்பதை எப்படி அவர்களுக்கு எடுத்துச்சொல்வது - இப்படி எந்த விஷயத்திலும் சார்லி சாப்ளினுக்குப் பரிச்சயமில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களிலெல்லாம், அண்ணன் சிட்னி சாப்ளினைப் பேசவிட்டு, அவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வார் சார்லி சாப்ளின். இப்படி ஏராளமாய்ச் சம்பாதித்தாலும், அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று சார்லி சாப்ளினுக்குத் தெரியாது. ஆகவே, அவருடைய சேமிப்பையெல்லாம், சரியான இடங்களில் முதலீடு செய்து, பல மடங்காய்ப் பெருக்கினார் சிட்னி. முன்பு, சார்லி சாப்ளினை வைத்து ஏகத்துக்கு சம்பாதித்துக் கொழித்துக் கொண்டிருந்த 'எஸ்னே' நிறுவனத்துடன் தீவீரமாய் வாதாடி, அவருக்குக் கை நிறைய போனசும், கூடுதல் சம்பளமும் வாங்கித் தந்தவர் சிட்னி தான்.

இப்போது, 'ம்யூச்சுவல்' நிறுவனத்துடனான பேச்சு வார்த்தைகளிலும், அவருடைய பங்குதான் முக்கியமானது. (இதை உணர்ந்த சார்லி சாப்ளின், தனக்குக் கிடைத்த போனஸ் தொகையில் பாதியை, சிட்னி சாப்ளினுக்குக் கொடுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது !) 'ம்யூச்சுவல்' நிறுவனத்துக்காக, பன்னிரண்டு குறும் படங்களை எடுத்துத் தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சார்லி சாப்ளின், 1916ம் ஆண்டு தொடக்கத்தில் தனது வேலைகளை ஆரம்பித்தார். அதே ஆண்டு மே மாதம், 'The Floorwalker' என்ற முதல் படம் வெளியானது. நகைச்சுவை பொங்கும் அந்தப் படம், ஒரு அட்டகாசமான ஆரம்பம். முந்தைய ஆண்டுகளின் கசப்பான அனுபவங்களை மறந்து, இதமான சூழலில், அருமையான பல படங்களை எடுக்கத் தொடங்கினார் சார்லி சாப்ளின். சாப்ளினுக்கு 'ம்யூச்சுவல்' நிறுவனம் மிகச் சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தது. சாப்ளினுக்கென்று ஒரு தனி படப்பிடிப்புத் தளத்தை (Lone Star Studio) ஒதுக்கித் தந்து, எந்தவிதத்திலும் அவருடைய வேலையில் குறுக்கிடாமல், ஆனால், அவருக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தந்து, அவருடைய படங்களைச் சிறப்பாக விநியோகித்தார்கள். ஆகவே, எந்தப் பிரச்சனைக்கும் தலையைக் கொடுக்காமல், தனது படங்களின் தரத்தை மேம்படுத்துவதில் மட்டும் தீவீர கவனம் செலுத்தினார் சார்லி சாப்ளின்.

'என்னுடைய திரைப்பட வாழ்க்கையிலேயே, மிகவும் சந்தோஷமான காலகட்டம்', என்று 'ம்யூச்சுவல்' நிறுவனத்துக்காகப் பணியாற்றிய காலத்தைக் குறிப்பிடுகிறார் சார்லி சாப்ளின். இதற்கு முக்கியமான காரணம், இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த சாப்ளினின் படங்கள் அனைத்தும், மௌனத் திரைப்பட வடிவத்தின் சகல சாத்தியங்களையும் புரிந்து கொண்டு, அவற்றை மிகச் சிறப்பாகப் பயன் படுத்தியவை. புதுமையான கதைகள், காட்சியமைப்புகள், கச்சிதமான திரைக்கதை, பொங்கும் நகைச்சுவை என்று ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார் சாப்ளின். இப்போதும், உலக திரைப்படங்களை அலசும் விமர்சகர்களும், மாணவர்களும், சாப்ளினின் 'ம்யூச்சுவல்' படங்களைப் பாடமாய்ப் பார்த்துப் பரவசப் படுகிறார்கள். தவிர, 'ம்யூச்சுவல்' நிறுவனத்திற்கு உலகமெங்கும் கிளைகள் இருந்தன. ஆகவே, அமெரிக்காவின் உச்ச நட்சத்திரமாய் இருந்த சார்லி சாப்ளினின் படங்களை, பல வெளி நாடுகளுக்கும் கொண்டு சென்று, சிறப்பாக விளம்பரம் செய்து, அவருக்கு உலகப்புகழ் தேடித் தந்தது 'ம்யூச்சுவல்' !

இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், 1931ம் ஆண்டு, சார்லி சாப்ளின் உலக சுற்றுலா சென்ற போது, எங்கோ பூமிப் பந்தின் ஒரு மூலையில், யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கிற, குட்டியூண்டு 'பாலி'த் தீவில் கூட, அவருடைய படங்களுக்கு ரசிகர்கள் இருப்பதைக் கண்டு கொண்டார். ஆகவே, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, சார்லி சாப்ளினின் படங்களுக்குத் தேவை கூடியது. அவரைத் தேடிப் பார்த்து ரசிக்கும் ஆர்வலர்கள் அதிகமானார்கள். அந்த உற்சாகத்தில், மேலும் அதிக தீவீரத்துடன் தனது படங்களைச் செதுக்கலானார் சாப்ளின்.

1916 - 17 ஆண்டுகளில், கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்கள் உழைத்து, 'ம்யூச்சுவல்' நிறுவனத்துக்காக மொத்தம் பன்னிரண்டு படங்களை இயக்கி, நடித்தார் சார்லி சாப்ளின். இந்தப் படங்களில், 'The Immigrant', 'Easy Street', 'The Pawnshop', 'The Vegabond' ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள். இந்தப் படங்களுள், 'The Immigran

>>Click here to continue<<

Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil

Share with your best friend
VIEW MORE

United States America Popular Telegram Group (US)