TG Telegram Group & Channel
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil | United States America (US)
Create: Update:

டங்கி விட்டார். ஆனால், இந்தப் புது நிறுவனத்தில் சார்லி சாப்ளினுக்கு ஏகப்பட்ட ஏமாற்றங்கள். ஒரு கட்டத்தில், கீஸ்டோனை விட்டு வெளியே வந்தது சரி தானா என்று அவரே யோசித்து வருந்தும் படி, பல விஷயங்களில் அவரை 'எஸ்னே' பாடாய்ப் படுத்தியது.

முதலாவதாக, தங்கள் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், சார்லி சாப்ளினுக்கு பத்தாயிரம் டாலர் தருவதாக 'எஸ்னே'தான் ஆசை காட்டியது. ஆனால், அவர் அதை ஒப்புக் கொண்டு, கையெழுத்திட்டுப் பல மாதங்களாகியும், அந்தப் பத்தாயிரம் டாலரில் கால்வாசி கூட அவருக்குத் தரப்படவில்லை. அதுபற்றி விசாரித்தால், 'அவரைக் கேள்', 'இவரைக் கேள்', 'அதோ, அந்த சுவரைக் கேள்' என்றெல்லாம் சாக்குப் போக்குகள். அதுவாவது பரவாயில்லை. தனது எல்லா வெற்றிப் படங்களையும் தானே எழுதி, இயக்கிப் பழகிய சார்லி சாப்ளினை, மற்றவர்களுடைய கதை, காட்சியமைப்புகளைப் பின்பற்றி நடிக்க வேண்டும் என்று சிலர் கட்டாயப் படுத்தினார்கள். இதுவும் அவருக்குப் பெரிய எரிச்சலைத் தந்தது. போதாக்குறைக்கு, சாப்ளினுக்குப் பிடித்த, பரிச்சயமான 'லாஸ் ஏஞ்சலஸ்' நகரில் படப்பிடிப்புகளை நடத்த விடாமல், சிகாகோவிலும், நைல்ஸிலும் தான் அவர் தனது படங்களை எடுக்க வேண்டும் என்று இந்தப் புதுக் கம்பெனி எதிர்பார்த்தது. இதற்கெல்லாம் சிகரம் வைப்பது போல், வேறொரு புதிய பிரச்சனையும் முளைத்தது - 'Essnay' கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான கில்பர்ட் ஆண்டர்ஸன் (Gilbert Anderson), பல 'கௌபாய்' வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அவர், சார்லி சாப்ளினின் பட விவகாரங்களில் அடிக்கடி தலை நீட்டி, தேவையில்லாத பல திருத்தங்களைச் சொன்னதாகவும், சாப்ளின் எப்படிப் படமெடுக்க வேண்டும் என்று அவருக்கே ஆலோசனை சொல்ல முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

மொத்தத்தில், சுதந்திரமாய்ப் படமெடுக்க வேண்டும் என்கிற ஆசையில் 'கீஸ்டோன்' நிறுவனத்திலிருந்து வெளியேறிய சாப்ளின், இங்கே பலவிதமான கட்டுப்பாடுகளில் சிக்கிக் கொண்டு, படம் எடுக்கிற ஆர்வத்தையே இழந்தவர் போல் சுற்றிக் கொண்டிருக்க நேர்ந்தது. இந்தக் களேபரங்களுக்கெல்லாம் அடிப்படையான ஒரு காரணம், சார்லி சாப்ளினின் மகிமை, இந்தப் புது நிறுவனத்துக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு வேகத்தில் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். ஆனால், 'இந்த ஆள் சரிப்படுவாரா ? இவரைத் தவிர மற்ற நடிகர்களுக்கெல்லாம் வாரத்துக்கு நூறு டாலர், ஐம்பது டாலர் தானே சம்பளம் ? இவருக்கு மட்டும் இவ்வளவு சம்பளம் அள்ளிக் கொடுக்கிறோமே, இது சரிதானா ? அந்த அளவுக்கு அவருடைய படங்கள் ஓடுமா ? லாபம் வருமா ?' என்றெல்லாம் பலவிதமான கணக்குகளைப் போட்டுப் பார்த்த முதலாளிகள், ஒரு திருப்தியான முடிவுக்கு வர முடியாமல் திணறினார்கள். ஆகவே, சாப்ளின் அலட்சியப் படுத்தப்பட்டார்.

நல்ல வேளையாக, சீக்கிரத்திலேயே இந்த நிலைமை மாறியது. ரசிகர்களிடையே சாப்ளினுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, வரவேற்பையும், அவருடைய படங்களுக்குக் கிடைக்கும் அதீத கவனம், மரியாதையையும் புரிந்து கொண்டபின், 'எஸ்னே' நிறுவனத்தின் முழு ஒத்துழைப்பும் சாப்ளினுக்குக் கிடைத்தது. 'கீஸ்டோன்' நிறுவனத்தில் இருந்த வரை, ஒரு வருடத்துக்கும் குறைவான கால கட்டத்தில், சுமார் 35 படங்களில் பங்கேற்ற சார்லி சாப்ளின், இப்போது அந்த வேகத்தைக் குறைத்துக் கொண்டு, தனது படங்களை மேலும் மெருகேற்றும் முயற்சியில் இறங்கினார். அப்போதெல்லாம், படப்பிடிப்பின் போது செலவாகும் திரைப்படச் சுருளின் நீளம் தான், ஒரு படத்தின் பட்ஜெட்டைத் தீர்மானித்தது. ஆகவே, ஒரு காட்சியை ஒழுங்காய்ப் படமாக்குவதற்குள், இயக்குனர்களுக்கு நுரை தள்ளி விடும். பலமுறை ஒத்திகை பார்த்து, ஒரே முயற்சியில் சரியாக எடுக்க வேண்டும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள், முயன்றார்கள். அந்த ஒரே 'ஷாட்'டில் யாரேனும் ஒரு நடிகர் தவறு செய்து விட்டாலோ, சுமாராக நடித்து விட்டாலோ கூட, யாரும் கவலைப்பட மாட்டார்கள். 'பரவாயில்லைப்பா', என்று சொல்லிக் கொண்டு அடுத்த காட்சிக்குப் போய் விடுவார்கள். பின்னே ? அந்தக் காட்சியை இன்னொரு முறை படமாக்குவதென்றால், அதற்கு ஆகும் படச்சுருளின் விலையை இயக்குனரின் முப்பாட்டனாரா தருவார் ? அன்றைய திரைப்பட உலகம், இப்படிப்பட்ட சிந்தனையைச் சுற்றி தான் அமைந்திருந்தது.

ஒரு படத்தில் கதை முக்கியமில்லை, நடிகர்கள் முக்கியமில்லை, காட்சி அமைப்புகள் முக்கியமில்லை, யதார்த்தம் முக்கியமில்லை, எதுவும் முக்கியமில்லை - படச்சுருளை வீணாக்கக் கூடாது, அது ஒன்று தான் முக்கியம். இப்படிப் பணப் பெட்டியின் மீது கண்ணை வைத்துக் கொண்டு படமாக்கினால், அமர காவியங்களா படைக்க முடியும் ? பெரும்பாலான படங்கள், பலவிதமான குறைகளுடன், அரை வேக்காடுகளாகவே வெளியாகிக் கொண்டிருந்தன. இத்தனைக்கும், அந்தக் கால நடிகர்கள், இயக்குனர்களின் திறமையில் ஒரு குறையும் சொல்லி விடமுடியாது. அந்த நாள் மௌனப் படங்களையெல்லாம், இன்னும் நிதானமாக, யோசித்துச் செய்திருந்தால், மேலும் சிறப்பாக வந்திருக்கும் என்று தா

>>Click here to continue<<

Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil

Share with your best friend
VIEW MORE

United States America Popular Telegram Group (US)