TG Telegram Group & Channel
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil | United States America (US)
Create: Update:

ளினை வளைத்துப் போட முயன்றன. அவருடைய இப்போதைய சம்பளத்தைப் போல் பல மடங்கு தருவதாக ஆசை காட்டி, அவரைக் கவர்ந்து இழுக்கப் பார்த்தார்கள். சாப்ளினும் இந்த விஷயத்தைத் தீவீரமாக யோசித்துப் பார்த்தார். எந்த விதத்தில் பார்த்தாலும், தன்னுடைய இப்போதைய சம்பளம் போதுமானதில்லை என்று அவருக்குத் தோன்றியது. ஆனால், அதற்காக சட்டென்று வேறு நிறுவனத்துக்குத் தாவுவதும் முடியாது. ஏனெனில், கீஸ்டோனுடன் இன்னும் நான்கைந்து மாத ஒப்பந்தம் பாக்கியிருக்கிறது. ஆகவே, அவர் நேராக மாக் சென்னெடிடம் சென்று, 'எனக்கு அதிக சம்பளம் வேண்டும்', என்றார். சாப்ளின் இப்படிக் கேட்பார் என்று ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த மாக் சென்னெட், அவருடைய கோரிக்கையை மறுக்கவில்லை, 'எவ்வளவு வேண்டும் ?', என்று மட்டும் கேட்டார். அதையும் முன்பே யோசித்து வைத்திருந்த சாப்ளின், 'வாரத்துக்கு ஆயிரம் டாலர்', என்றார். மாக் சென்னெடுக்கு திக்கென்றது.

ஏனெனில், 'கீஸ்டோன்' நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவரான அவருக்கே, வாரத்துக்கு ஆயிரம் டாலர் சம்பளம் இல்லை ! இதை சாப்ளினிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னார் அவர். ஆனால் சாப்ளின் அதை ஏற்கவில்லை, 'உங்களுடைய சம்பளத்தைப் பற்றி எனக்கு என்ன அக்கறை ? மக்கள் எனக்காகத் தான் படம் பார்க்க வருகிறார்கள். ஆகவே, எனக்கு ஆயிரம் டாலர் சம்பளம் வேண்டும்', என்றார் அவர். 'அவ்வளவு சம்பளம் எங்களால் தரமுடியாது. வேண்டுமானால், உன்னை இந்த நிறுவனத்தின் பங்குதாரராகச் சேர்த்து விடுகிறேன். லாபத்தில் ஒரு பங்கு உனக்குக் கிடைக்கும்', என்றார் மாக் சென்னெட். சாப்ளின் இதை ஏற்றுக் கொண்டாரா, மறுத்து விட்டாரா தெரியவில்லை.

ஆனால், அதன் பின் கீஸ்டோனில் இருந்தவரை, அவருடைய சம்பளம் உயரவே இல்லை. ஒன்றுக்குப் பத்து வேலைகள் பார்த்த போதும், எண்ணற்ற அமெரிக்க சினிமா ரசிகர்கள் அவரை ரசித்துப் புகழ்ந்து பாராட்டிய போதும், கீஸ்டோனில் கடைசிவரை, வாரத்துக்கு நூற்றி எழுபத்தைந்து டாலர் தான் சம்பளமாய் வாங்கிக் கொண்டிருந்தார் சார்லி சாப்ளின்.

1914ம் ஆண்டில், கீஸ்டோனுக்காக சார்லி சாப்ளின் நடித்த படங்கள் சுமார் முப்பத்தைந்து. இவற்றில், ஒரே ஒரு படத்தைத் தவிர, மற்றவை அனைத்தும் ஒரு ரீல், இரண்டு ரீல் குறும்படங்கள் தான். இந்தக் குறும்படங்களில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களை, சாப்ளினே எழுதி, இயக்கி, நடித்திருந்தார். அந்த ஆண்டு இறுதியில், கீஸ்டோனுடனான சாப்ளினின் ஒப்பந்தம் முடியப் போகிற சமயத்தில், அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்கலாம் என்கிற பேச்சு தொடங்கியது. அப்போது, மீண்டும் அவருடைய சம்பளப் பிரச்சனை தலை தூக்கியது. பொன் முட்டை இடும் சாப்ளினை, கீஸ்டோன் இழக்க விரும்பவில்லை. ஆகவே, சாப்ளினின் சம்பளத்தை, கிட்டத்தட்டை ஐந்து மடங்கு உயர்த்தி, 'இப்போதைக்கு வாரம் 750 டாலர் தருகிறோம்', என்றார் மாக் சென்னெட். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாய் இந்தச் சம்பளத்தை ஏற்றுவதாகப் பேச்சு. ஆனால், இதில் சாப்ளினுக்கு சம்மதமில்லை. அவர் எதிர்பார்த்த ஆயிரம் டாலர் சம்பளம் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம், அது தவிர, இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது. வருடத்துக்கு 35 படங்கள் என்று பரபரப்பாய் ஓடாமல், நிறுத்தி நிதானமாக, ஒவ்வொரு படத்திலும் அதிக நேரம் செலவழித்து, இன்னும் நன்றாய்ச் செதுக்கி வெளியிட விரும்பினார் சாப்ளின்.

ஆனால், பண ருசி கண்டுவிட்ட 'கீஸ்டோன்' நிறுவனம், அதற்குச் சம்மதிக்காது தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பொருள்களைத் தயாரித்துக் குவிப்பது போல, மீண்டும் அதிவேகப் படங்கள் எடுக்கும் படிதான் அவரை வற்புறுத்தும். இந்தக் காரணங்களால், கீஸ்டோனிலிருந்து விலகி, வேறொரு நிறுவனத்தில் சேர்வதாக முடிவெடுத்தார் சாப்ளின். ஆனால், அந்த முடிவை தைரியமாய்ச் செயல் படுத்தமுடியாத படி ஒரு தயக்கம் அவரைத் தடுத்துக் கொண்டிருந்தது. ஏற்கெனவே, 'கீஸ்டோன்' நிறுவனத்திலிருந்து பிரிந்து, வேறு சிலருக்காக தனியே படமெடுக்கக் கிளம்பிய சில நடிகர்கள், படுதோல்வி அடைந்திருந்தார்கள். ஆகவே, மக்கள் 'கீஸ்டோன்' பேனருக்காகத் தான் படத்தைப் பார்க்க வருகிறார்கள் என்பதான ஒரு மாயத் தோற்றம் இருந்தது. இப்படியொரு நிலையில், சார்லி சாப்ளின் அங்கிருந்து விலகினால், அவருடைய படங்களுக்குக் கூட்டம் குறைந்து போகுமோ என்று அவர் பயந்தார்.

யாரையோ நம்பி, 'கீஸ்டோன்' போன்ற ஒரு பெரிய கம்பெனியைப் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் தானா ?

என். சொக்கன்.

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

>>Click here to continue<<

Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil

Share with your best friend
VIEW MORE

United States America Popular Telegram Group (US)