TG Telegram Group & Channel
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil | United States America (US)
Create: Update:

க் கேட்டதும் சார்லி சாப்ளின் மயக்கம் போட்டு விழாதகுறை தான்.

இன்று காலையில், 'வெளியே போ' என்று விரட்டிய அதே மனிதர், இப்போது, 'உள்ளே வாங்க ஸார்', என்று பணிந்து, குழைகிறார். 'நீங்க எது சொன்னாலும் செஞ்சுடலாம்', என்று தாராளமாய் வரமளிக்கிறார். திடீரென்று என்னுடைய மதிப்பு இப்படி உயர்ந்து விட்டதே, எப்படி ? நான்கைந்து மணி நேரத்தில் அப்படி என்ன அதிசயம் நடந்து விட்டது ? இந்தப் புதிருக்கான பதில், சீக்கிரத்திலேயே அவருக்குத் தெரியவந்தது. அன்று காலை, நியூயார்க் நகரிலுள்ள 'கீஸ்டோன்' அலுவலகத்திலிருந்து வந்த ஒரு தந்தி தான். மாக் சென்னெடின் திடீர் மனமாற்றத்துக்குக் காரணம் ! அப்படி அந்தத் தந்தியில் என்ன தகவல் இருந்தது ?

'நம்முடைய புதிய படத்தில், விநோதமாய் உடை அணிந்து கொண்டு ஒரு நடிகர் நடிக்கிறாரே, அந்த ஆளைப் பார்த்தாலே, மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். தியேட்டர்களில் கூட்டம் குவிகிறது. மேலும் மேலும் புதிய பிரதிகள் வேண்டும் என்று வெவ்வேறு ஊர்களிலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அந்த நடிகரை அதே மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, நிறைய படங்களைத் தயாரிக்கலாம். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் !' - இப்படி ஒரு இனிப்பான தகவல் மாக் சென்னெடுக்குக் கிடைத்த பிறகு, அவர் சார்லி சாப்ளினைப் பகைத்துக் கொள்ளவேண்டாம் என்று முடிவெடுத்தார். உடனடியாக அவரைச் சந்தித்து அவர் கேட்பதையெல்லாம் கொடுப்பதாக உறுதி சொல்லி சமாதானப்படுத்தி சாப்ளின் தொடர்ந்து 'கீஸ்டோன்' நிறுவனத்திலேயே இருக்கும் படி செய்து விட்டார்.

சீக்கிரத்திலேயே, இந்த விஷயம் சாப்ளினுக்கும் தெரிந்து விட்டது. மக்களிடையே தன்னுடைய புதிய வேஷத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பற்றி அவருக்கு ரொம்ப சந்தோஷம் பெருமை. அந்தத் தெம்பில், நேரடியாக மாக் சென்னெடைச் சந்தித்து, 'மற்றவர்கள் இயக்கத்தில் நடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை', என்றார்.

'என்னுடைய படங்களை நானே சொந்தமாய் இயக்க விரும்புகிறேன் !' இதைக் கேட்ட மாக் சென்னெட் திகைத்துப் போய்விட்டார். ஏனெனில், ஒரு திரைப்படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமில்லை. பட உலகில் நெடுநாள் பணியாற்றிய பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலிகளே டைரக்ஷனின் நுணுக்கங்கள் புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, நேற்று வந்த சின்னப் பையன், இன்றைக்கு படம் இயக்குகிறேன் என்று சொல்கிறானே, இது என்ன அசட்டு தைரியம் ? இப்படி நினைத்த அவர், 'அதெல்லாம் முடியாது', என்று சாப்ளினிடம் கண்டிப்பாய்ச் சொல்லி விட்டார்.

'படங்களில் நடிப்பதற்காகத் தான் உன்னை அழைத்தோம். உன்னுடைய ஒப்பந்தத்திலும் அப்படித் தான் எழுதியிருக்கிறது. இப்போது திடீரென்று படம் இயக்குகிறேன் என்று சொன்னால் எப்படி ? அதற்கெல்லாம் ஒரு தகுதி, தராதரம் வேண்டாமா ?' ஒரு விதத்தில், மாக் சென்னெட் இப்படிதான் பேசுவார் என்று சாப்ளின் ஏற்கெனவே எதிர் பார்த்திருக்க வேண்டும். ஆகவே, அவரும் தன்னுடைய கட்சியை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து வாதம் செய்தார்.

'இன்னொருவர் சொல்வதைக் கேட்டு நடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு மேலும் சுதந்திரம் வேண்டும். புதுமையான நகைச்சுவைக் கதைகளை காட்சிகளை நானே சிந்தித்து அமைக்க முடியும். இயக்குநராகப் பணியாற்றுவதற்கு எனக்குக் கூடுதல் சம்பளம் எதுவும் வேண்டாம் என்றெல்லாம் பேசி, மாக் சென்னெடின் மனதை மாற்ற முயன்றார். மெல்ல மெல்ல அவருடைய பேச்சில் சென்னெடுக்கு நம்பிக்கை பிறந்தது. என்றாலும், ஒரு கத்துக் குட்டியிடம் டைரக்ஷன் பொறுப்பை ஒப்படைப்பதா என்று அவர் தயங்கினார்

சினிமாவைப் பற்றி இந்தப் பையனுக்கு என்ன தெரியும் ? படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட ஃபிலிமையும், நேரத்தையும், பணத்தையும் வீணாக்கி விடுவானே ! அவருடைய தயக்கத்தில் இருக்கிற நியாயம், சார்லி சாப்ளினுக்கும் புரிந்தது. என்றாலும், தன்னால் நல்ல படங்களை எடுக்கமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆகவே, எப்படியாவது சென்னெடின் இந்தக் கவலையைத் தீர்த்து வைத்து, டைரக்ஷன் வாய்ப்பை வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். இதற்காக, ஒரு மிகப் பெரிய ஆபத்தைச் சந்திக்கத் துணிந்தார் சார்லி சாப்ளின். இன்னும் தெளிவாய்ச் சொல்வதானால், தன்னுடைய வாழ்நாள் சேமிப்பைப் பணயமாக வைத்து, முதல் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். மாக் சென்னெடுக்கு என்ன பயம் ? திரைப்படங்களை இயக்கும் அனுபவம் இல்லாத சார்லி சாப்ளின் எப்படிப் படம் எடுப்பாரோ, அது ஓடுமோ, ஓடாதோ, ... ஒருவேளை ஓடாவிட்டால், அதனால் ஏற்படும் நஷ்டத்துக்கு யார் பதில் சொல்வது ? 'நான் பதில் சொல்கிறேன்', என்றார் சார்லி சாப்ளின், 'என்னுடைய சேமிப்பு முழுவதையும், உங்கள் பெயரில் வங்கியில் போட்டு விடுகிறேன். நான் எடுக்கிற படம் நன்றாக ஓடி, வெற்றியடைந்தால், என்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுங்கள். ஒரு வேளை அந்தப் படம் ஓடாவிட்டால், அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு, நீங்கள் அந்தப்

>>Click here to continue<<

Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil

Share with your best friend
VIEW MORE

United States America Popular Telegram Group (US)