TG Telegram Group & Channel
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil | United States America (US)
Create: Update:

*இப்படிக்கு 🏹 காலம்*

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

*இணையற்ற நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு!*

என். சொக்கன்.

*7. The Adventurer*

முதல் படத்தில் நடித்த போது, சார்லி சாப்ளினை யாருக்கும் தெரியாது. அந்த அறிமுகப் படமும், வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்டது. சாப்ளினின் இரண்டாவது படமும் பெரிய வெற்றி என்று சொல்லி விட முடியாது. ஆனால், நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த 'Tramp' என்ற புகழ்பெற்ற கதாபாத்திரம், அந்தப் படத்தில் தான் அறிமுகமானது. 'யார் இந்தப் பையன் ? பார்ப்பதற்கு ரொம்ப வேடிக்கையாய் இருக்கிறானே', என்று திரை ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். ரசித்தார்கள். சிரித்தார்கள்.

வெனிஸ் நகரத்தில் படமாக்கப்பட்ட அந்தத் திரைப்படத்தின் பெயர், 'Kid Auto Races at Venice', முதல் படத்தில் சாப்ளின் செய்ய ஆசைப்பட்ட பல விஷயங்களை, இந்தப் படத்தில் செய்து பார்க்க முடிந்தது. என்றாலும், 'கீஸ்டோன்' குழுவிலிருந்த மற்றவர்களுக்கு, சாப்ளினின் மேலான வெறுப்பு இன்னும் குறைந்திருக்கவில்லை. மாக் சென்னெடுக்குப் பிடித்துப் போய் விட்ட சாப்ளினின் புதிய வேஷத்தைக் கூட அவர்கள் அவ்வளவாய் அங்கீகரிக்கவில்லை, 'பையன் ரொம்ப அலட்டுகிறான்', என்று அலட்சியமாய் முகத்தை நொடித்துக் கொண்டு, ஒரு வித பொறாமையோடு தான் சாப்ளினைப் பார்த்தார்கள். ஆகவே, சாப்ளின் பங்குபெறும் படப் பிடிப்புகளெல்லாம், அனல் பறக்கும் பட்டி மன்றங்களாக உருமாறின.

சாப்ளின் ஏதாவது ஒரு யோசனை சொல்வதும், அதைப் படத்தில் சேர்க்க முடியாது என்று இயக்குநர் பிடிவாதம் பிடிப்பதும், 'அப்படியானால், நான் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன்', என்று சாப்ளின் முறைத்துக் கொள்வதுமாக, தினந் தோறும் சண்டை, கூச்சல், அடாவடி. விவகாரம் பெரிதாகி, மீண்டும் மாக் சென்னெடிடம் சென்றது. அவர் உடனடியாக சாப்ளினை அழைத்து, 'தம்பி, நீ செய்வது சரியில்லை', என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டார். 'டைரக்டர் சொல்வதைக் கேட்டு, அதன்படி நடிக்க முடியுமானால் உனக்கு இங்கே வேலை உண்டு. இல்லையென்றால், நீ மூட்டையைக் கட்டிக் கொண்டு கிளம்பலாம்' இதைக் கேட்டதும், சார்லி சாப்ளின் நொந்து போய் விட்டார். கஷ்டங்களெல்லாம் தீர்ந்து, இனிமேல் நமக்கு நல்ல காலம் தான் என்று நினைக்கும் வேளையில், தன்னுடைய திரை வாழ்க்கை, இப்படி அல்பாயுசாக முடிய வேண்டுமா என்று சோகத்துடன் நினைத்தவர், எதுவும் பேசாமல் தன் அறைக்குத் திரும்பி விட்டார். இப்போது என்ன செய்யலாம் ? அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு, அபத்தமான நகைச்சுவை வேஷங்களில் தொடர்ந்து நடிப்பதா, அல்லது, இதெல்லாம் எனக்குச் சரிப்படாது என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு, இங்கிலாந்துக்கு நடையைக் கட்டுவதா ? நாள் முழுதும் இதையே யோசித்துக் கொண்டிருந்த சாப்ளினால் எந்த உறுதியான முடிவுக்கும் வர முடியவில்லை.

கலை ஆர்வத்தையும், இருப்பியல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர் தூக்கிப் பார்த்து, இவற்றில் எது முக்கியம் என்று தீர்மானிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் அவர். இனம்பு ரியாத கோபமும், சோகமும், தோல்வி மனப்பான்மையும் அவரைச் சோர்வடையச் செய்தது.

அப்போது, அவரைப் பார்ப்பதற்கு மாக் சென்னெட் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. முதலாளியா ? அவர் ஏன் என்னைப் பார்ப்பதற்கு வரவேண்டும் ? ஒரு வேளை, இப்போதே என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டார்களா ? - இப்படிப் பதட்டம் தரும் கேள்விகள், கற்பனைகளுடன் மாக் சென்னெடைச் சந்திக்க ஓடினார் சாப்ளின். ஆனால், அவருடைய அச்சங்களுக்கு நேர்மாறாக, 'சாப்ளின், என்மீது கோபமா ?', என்று தான் பேச்சைத் தொடங்கினார் மாக் சென்னெட். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினார் சார்லி சாப்ளின். காலையில் அத்தனை கோபமாய்ப் பேசிய சென்னெடுக்கு, இப்போது என்ன ஆகிவிட்டது ? அவருக்குக் கீழே வேலை செய்கிற சாதாரண நடிகன் நான், என்னிடம் ஏன் இத்தனை குழைவாகப் பேசுகிறார் என்றெல்லாம் நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார் அவர்.

'சாப்ளின், காலையில் நான் சொன்னது எல்லாமே, உன்னுடைய நல்லதுக்குத் தான்', என்று சாமாதானமாய்ச் சொன்னார் மாக் சென்னெட். 'இந்தக் குழுவிலிருக்கிற எல்லோருக்கும் உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது. அதனால் தான், உன்னுடைய எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்ற அக்கறையில் தான் நான் உன்னிடம் கடுமையாய்ப் பேசினேன். நீ அதைத் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் இப்படிப் பேசிக் கொண்டேபோக, அடுத்தடுத்து வந்து விழும் ஆச்சரியங்களைத் தாங்க முடியாதவராய்த் தடுமாறினார் சாப்ளின்.

இந்தக் கட்டத்தில் என்ன பேச வேண்டும் என்று கூட அவருக்குத் தோன்ற மறுத்தது. இந்த 'ஜிலீர்' பேச்சுகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, 'நீ எப்போதும் போல் நம் படங்களில் தொடர்ந்து நடிக்கலாம் சாப்ளின். உன்னுடைய யோசனைகளை முடிந்தவ ரை பயன்படுத்திக் கொள்ளுமாறு, நான் டைரக்டர்களிடம் சொல்லியிருக்கிறேன்' என்றார் மாக் சென்னெட். இதை

>>Click here to continue<<

Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil

Share with your best friend
VIEW MORE

United States America Popular Telegram Group (US)