TG Telegram Group & Channel
Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil | United States America (US)
Create: Update:

ட வைத்தது போல், இருந்தும், இல்லாத சின்னஞ்சிறிய மீசை.

சும்மா, சாஸ்திரத்துக்கு ஒரு மீசை, 'இந்த உருவத்துக்கு இது போதும்' என்று திருப்தியோடு நினைத்துக் கொண்டார் சாப்ளின். பிறகு, தன்னை மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு, வெளியேறி நடக்க ஆரம்பித்தார். இப்போது அவருடைய உடைமட்டுமில்லை, நடையும் மாறியிருந்தது. சாதாரணமாய் நீங்களும், நானும் நடப்பது போலில்லாமல், கால்களை லேசாக அகட்டிக் கொண்டு, சற்றே விநோதமான பாணியில், ஏதோ அவசரத்திற்குக் கட்டுப்பட்டவர் போல் விறுவிறுவென்று நடந்தார் சார்லி சாப்ளின். (பின்னாள்களில், அவருடைய இந்த உடையலங்காரமும், நடையும் தான் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், 'Little Fellow', 'Tramp' போன்ற செல்லப் பெயர்களையும் பெற்றுத்தந்தது) மாக் சென்னெடும், அவரோடிருந்த படக் குழுவினரும், தூரத்தில் சார்லி சாப்ளினைப் பார்க்கும் போதே, கொஞ்சமாய்ச் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.

அங்கிருந்து மளமளவென்று நடந்து பக்கத்தில் வந்து விட்ட சாப்ளின், எதிர் பாராதவிதமாக, யாரோ ஒருவரின் மீது மோதி, லேசாய்ச் சரிந்து விழுந்தார். பிறகு சமாளித்து எழுந்து கொண்டு, அவரிடம் மன்னிப்புக் கேட்கும் விதமாக, தனது தொப்பியை உயர்த்திக் காட்டி விட்டு, பின்னோக்கி நகரும் போது, இன்னொருவரின் மீது மோதிக் கீழே விழுந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும், குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கலானார்கள்.

'இதை, இதை, இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்', என்று நரசுஸ் காபி விளம்பரம் போல் சொன்னார் மாக் சென்னெட்.
'சார்லி, இந்தப் படத்தில் இது தான் உன் வேடம் !' உலக சினிமாவின் ஒரு முக்கியமான சகாப்தம் அந்த விநாடியில் அமர்க்களமாய்த் தொடங்கியது.

என். சொக்கன்.

*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

>>Click here to continue<<

Time pass / fun only / use full tips / songs / rimes / spiritual tamil

Share with your best friend
VIEW MORE

United States America Popular Telegram Group (US)